கல்முனை வைத்தியசாலைக்குள் மொசாட்டாம்... வைத்தியர் சுகுணன் உளவாளியாம்...
றூம் போட்டு யோசிப்பாங்களோ என்ற வகையில் கல்முனை வைத்தியசாலையை மையப்படுத்திய புதிய திடுக் விடயங்கள் வருகின்றன.
இந்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் பணிநேர ஆடைகள் தொடர்பான மருத்துவமனையில் எழுப்படும் குரல்களுக்கு பின்னால் மொசாட் சதி இருப்பதான அடித்து விடல்கள் கூட வந்துவிட்டன.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இன்னும் ஒரு படிமேலேபோய் கல்முனை மருத்துவமனையின் பொறுப்பாளரான தமிழ் மருத்துவர் சுகுணன் மொசாட்டின் வலையில் விழுந்துவிட்டாரா? என சந்தேகம் எழுப்புகிறார்.
அரசாங்கம் இந்த விடயத்தில் வேண்டுமானால் இலங்கை அரச மருத்துவ சேவையில் உள்ள சீருடை தொடர்பான தமது முன்னைய சுற்றறிக்கைகள், தாபனவிதிக்கோவைகள் சுகாதார அமைச்சின் நடைமுறைகள் என ஏற்கனவே உள்ள விதிகளை மாற்றி முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் விருப்பத்துக்கு இணங்கலாம்;. அதில் பிரச்சனை ஏதும் இல்லை.
ஆனால் ஏற்கனவே உள்ள சீருடை தொடர்பான அரசாங்க சுற்றறிக்கை விதியை நினைவுபடுத்தும் மருத்துவர் ஒருவருக்கு ஏன் இந்த திடீர் உளவாளி பட்டம் என்பது தெரியவில்லை . ஆயினும் அரசியல்வாதிகள் அடித்து விடுகிறார்கள்.
இப்போது கூட போலியான இறக்குமதிகளை காட்டி நாட்டை விட்டு ஒரு பில்லியன் டொலர் அன்னிய செலாவணியை அதாவது 340 பில்லியன் ரூபாவை சட்டவிரோத உண்டியல் மூலம் வெளியேற்றிய ஒரு மோசடி வலையமைப்பின் முக்கிய சூத்திரதாரியாக ஜெப்ரி முகமட் என்பவர் இருக்கிறார் அதேபோல பாதாள உலகின் சுத்திரதாரியாக கஞ்சிபானி இம்ரான் இருக்கிறார்.
அதேபோல டுபாயில் தூக்கப்பட்டு தற்போது சிஐடியின் உயர்மட்ட பாதுகாப்பில் உள்ள அமெரிக்காவும் கோரும் இன்னொரு பிரபல பாதாள முகமான ஷிரான் பாசிக்கும் உள்ளார். இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் தான்.
இவ்வாறான மாபியாக்களுடன் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களை யாராவது தொடர்புபடுத்த முடியுமா? அது அபத்தத்திலும் அபத்தமாகும்.
அதுபோல இன்னொரு அபத்தம்தான் சுகாதார ஊழியர்களின் சீருடைகள ; தொடர்பாக ஏற்கனவே உள்ள விதிகளை கூறும் கல்முனை மருத்துவமனையின் பொறுப்பாளரான சுகுணனையும் இஸ்ரேலிய மொசாட் உளவாளி என சொல்வது. இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |