பயணக்கைதிகளை விடுவிக்க மீண்டும் களமிறங்கும் இஸ்ரேல் : வெளிநாடு பறக்கிறார் மொசாட் தலைவர்
ஹமாஸ் அமைப்பால் பிடித்துச் செல்லப்பட்ட பயணக்கைதிகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் புலனாய்வு பிரிவான மொசாட் அமைப்பின் தலைவர் டேவிட் பர்னியா கத்தார் பிரதமருடன் பேச்சு நடத்தவுள்ளார்.
மொசாட்டின் தலைவர் டேவிட் பர்னியா, இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் கத்தார் பிரதமர் மொஹமட் பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை சந்தித்து, காசாவில் கடத்தப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் நிறுத்தம் முறிவடைந்த பின்னர்
ஒரு வார கால போர் நிறுத்தம் முறிந்த பிறகு இஸ்ரேலிய மூத்த அதிகாரி மற்றும் கத்தார் பிரதமர் இடையே சந்திப்பு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். பணயக்கைதிகளின் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் காஸாவிலிருந்து திரும்புவதற்கான அழுத்தத்தை இஸ்ரேல் அரசுக்கு கொடுப்பதால், இந்த பேச்சுக்கு இஸ்ரேல் மீண்டும் முன்வந்துள்ளது.
கடத்தப்பட்ட மற்ற பெண்களை விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால் முந்தைய ஒப்பந்தம் இரண்டு வாரங்களுக்கு முன்பு தோல்வியடைந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |