ஈரானியக் கடற்படைத் தளபதிக்கு குறிவைத்த மொசாட்: நடந்த அதிரடி வேட்டை
ஈரானியக் கடற்படைத் தளபதியை அவரது பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே வேட்டையாட இஸ்ரேலிய உளவுத்துறை மொசாட் நடத்திய அதிரடி முயற்சி அம்பலமாகியுள்ளது.
மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டம், கடைசி வினாடியில் ஈரானியப் பாதுகாப்புப் பிரிவினரால் முறியடிக்கப்பட்டு பெரும் மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஈரானின் அதியுயர் பாதுகாப்புப் பிரிவுகளுக்குள்ளேயே மொசாட்டின் உளவாளிகள் ஊடுருவியிருப்பது, அந்நாட்டு உளவுத்துறையின் பலவீனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அணுசக்தி விஞ்ஞானிகளைத் தொடர்ந்து தற்போது இராணுவத் தளபதிகளையும் இஸ்ரேல் குறிவைப்பது, ஈரானின் இராணுவக் கட்டமைப்பை நிலைகுலையச் செய்யும் ஒரு நேரடிப் போர் அறிகுறி எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த ஊடுருவலால் கடும் சினமடைந்துள்ள ஈரான், இஸ்ரேல் மீது எந்நேரமும் நேரடித் தாக்குதலைத் தொடுக்கலாம் என்பதால் மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
ஈரானியக் கடற்படைத் தளபதியை வேட்டையாட முயன்ற அந்த மர்மத் திட்டம் என்ன ? மொசாட்டின் ஊடுருவல் ஈரானுக்குள் இவ்வளவு ஆழமாக நிகழ்ந்தது எப்படி ? இது பிராந்தியப் போருக்கான முற்றுப்புள்ளியா அல்லது ஆரம்பப் புள்ளியா ? என்பது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்