உலகின் சிறந்த மூன்று சுற்றுலா நாடுகள்: இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் என்ன தெரியுமா!
2024 ஆம் ஆண்டில் கோடை காலத்தில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த முதல் மூன்று நாடுகளுள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் (Forbes) நாளிதழ் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையில் (srilanka) இயற்கை அழகை கண்டுகளிக்கும் விதத்தில் 22 தேசிய பூங்காக்கள் உள்ளதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
சிறந்த சுற்றுலா நாடு
அதனுடன், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைய நிலமைகளால் மீள எழுந்திருக்கும் இலங்கை இவ்வாண்டில் சுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளுள் முன்னணியில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சுற்றுலா பயணிகளுக்காக அதிசொகுசு ரீதியிலான வசதிகள் இலங்கையில் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை மேடு பள்ளங்களுடன் மற்றும் கண்கவர் கடற்கரைகளுடன் காணப்படக்கூடிய தீவாக உள்ளதுடன் ஒப்பீட்டளவில் பாலி நாட்டைப் போன்ற ஈர்ப்பைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் கோடை காலத்தில் சுற்றுலா செல்வதற்காக கிரீஸ் (Greece), மொரிசியஸ் (Mauritius) மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |