வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த சில மாதங்களில் தளர்த்தப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், வாகனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் அத்தியாவசிய வாகனங்களுக்கான தடை படிப்படியாக தளர்த்தப்பட்டதுடன், அடுத்த சில மாதங்களில் மற்ற வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் விலை
பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக அரசாங்கத்தின் வருமானம் மற்றும் அந்நிய செலாவணி வளர்ச்சியின் காரணமாக இந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்க முடிந்தது மற்றும் அரசாங்கம் விரும்பிய இலக்குகளை அடைய முடிந்தது.
காலவரையின்றி அதிகரித்துள்ள வாகனங்களின் விலைகள் வாகன இறக்குமதியுடன் 60% பெருமளவு குறையும் என இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |