சூரியனுடன் இணையும் புதன்..புத்தாதித்ய யோகத்தால் அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!
ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குப் பிறகு தனது ராசியை மாற்றுகிறது, இந்த கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகின்றதால் ஏற்படும் கிரகங்களின் பெயர்ச்சி காரணமாக, அதன் பலன் அனைத்து ராசிகளிலும் தாக்கம் செலுத்துகிறது.
இந்த கிரகப்பெயர்ச்சியின்போது, ஒரு ராசியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருக்கும்போது இது கிரகங்களின் சேர்க்கை என்று அழைக்கப்படுகிறது, அந்தவகையில் மீனத்தில் புதன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை இடம்பெறப்போவதால், மீனத்தில் புத்தாதித்ய யோகம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புத்தாதித்ய யோகமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கவல்லது, எனவே இந்தப் புதாதித்ய யோகமானது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபபலனை எப்போது அளிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதியான வியாழனன்று காலை 9:21 மணிக்கு மீன ராசியில் புதன் நுழைகிறார். இதன்பின் 2024 மார்ச் 14 ஆம் திகதியான வியாழனன்று மதியம் 12:23 மணிக்கு சூரியனும் மீன ராசிக்கு மாறுகிறார், மீனத்தில் மார்ச் 14ல் புதனும் சூரியனும் இருப்பதால் புதாதித்ய யோகம் உருவாகும்.
சூரியனும் புதனும் மீனத்தில் சஞ்சரிக்கின்ற காலத்திலேயே, ரிஷபம் ராசிக்காரர்கள் சுப பலன் அடைவார்கள். ரிஷபத்தில் பதினொன்றாம் வீட்டில் புத்தாதித்ய யோகம் உருவாகும்.
இந்த யோகம் அமைவதால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டும், இந்த காலகட்டத்தில் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும், ஆடம்பரங்களை அனுபவிப்பார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும் சுபகாலமாக இது அமையும்.
கன்னி
மிதுனத்தின் பத்தாம் வீட்டில் சூரியன் மற்றும் புதன் இணைவு உருவாகும் இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் இனிமையாக இருக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் பண பலன்கள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் இனிய தருணங்களை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளிநாட்டில் தொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கூடும்.
அதேபோல் கன்னியின் ஏழாவது வீட்டில் புதன் மற்றும் சூரியன் சேர்க்கை உருவாகுவதால், கன்னி ராசிக்காரர்களிற்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
கன்னி ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் பணப் பலன்களைப் பெறலாம், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் முன்னேற்றம் காண்பார்கள். இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் லாபம் பெறும் சுப பலன்களை பெறும் காலமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |