இலங்கையில் எந்தவொரு தொழிலையும் செய்யாதோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Sumithiran
எந்தவொரு தொழிலையும் செய்யாதோர்
இலங்கையில் குறைந்தபட்சமாக வேலை தேடுபவர்களை விட எந்தவொரு தொழிலையும் செய்யாதோர் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 2021ஆம் ஆண்டிற்கான நாட்டின் வேலைப்படை தரவுளின் படி, நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் உள்ள மக்கள் தொகை சுமார் 8.55 மில்லியன் ஆக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகமாக பெண்கள்
அதேசமயம் நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் அல்லாதோர் சுமார் 8.58 மில்லியனாகவும் காணப்படுகிறது.
அவர்களில் , 73 சதவீதமானேர் பெண்களாக உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
