கனடாவில் களவாடப்பட்ட 80 வாகனங்கள் : காவல்துறையினர் அதிரடி மீட்பு
Canada
World
By Beulah
சில ஆண்டுகளாக பாரியளவில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக கனடா காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், கனடாவில் களவாடப்பட்டிருந்த 80 வாகனங்களை காவல்துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர்.
இவ்வாறு களவாடப்பட்ட வாகனங்களின் சந்தைப் பெறுமதி சுமார் 5 மில்லியன் டொலர்கள் என யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட விசாரணைகள்
கடந்த ஏழு வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களின் மூலம் களவாடப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
வாகனங்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, வாகனக் கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட பல்வேறு சாதனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்