கனடா விபத்தில் படுகாயமடைந்த தாயாரின் நிலை- உறவினர் வெளியிட்ட அறிவிப்பு
கனடா விபத்து
கனடாவில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இணுவிலை பூர்விகமாக கொண்ட தமிழர்களான இரண்டு சகோதரர்கள் உயிரிழந்த நிலையில் சம்பவத்தில் காயமடைந்த அவர்கள் தாயாரின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மார்க்கம் நகரில் ட்ரக் வண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதி நடந்த விபத்தில் பதீரனா புவேந்திரன் (21) மற்றும் அவரின் சகோதரி நெலுக்சனா புவேந்திரன் (23) இருவரும் உயிரிழந்தனர்.
உடல் நிலையில் முன்னேற்றம்
இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர்களின் தாய் ஸ்ரீரதி சண்முகநாதன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் உயிரிழந்த பதீரனாவின் உறவினர் துர்க்கா சர்வேஸ்வரன் கூறுகையில், பதீரனா மற்றும் நெலுக்சனாவின் மரணத்தை என்னால் நம்பமுடியவில்லை. சிகிச்சையில் உள்ள ஸ்ரீரதி தேறி வருகிறார், உடல்நிலை மேம்பட்டு வருகின்றது என மருத்துவமனை தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதேவேளை விபத்து தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 1-866-876-5423 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்