மன்னார் வைத்தியசாலையில் தாய், சேய் மரணங்கள் : சுகாதார அமைச்சுக்கு பறந்த கடிதம்

Mannar Ministry of Health Sri Lanka Hospitals in Sri Lanka
By Shalini Balachandran Nov 21, 2024 07:37 AM GMT
Report

மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகாதார அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய், சேய் மரணங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியே இந்தக் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கட்டிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த தாய் மூச்சுத்திணறல் உட்பட்ட சில உபாதைக்குள்ளாமை தொடர்பில் அவரது உறவினர்கள அங்கு கடமையிலிருந்தவர்களுக்குச் சுட்டிக்காட்டியும் அவற்றைப் புறந்தள்ளி சாதாரண மகப்பேற்றுப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இன்று காலை இந்தியா பறந்தார் ரணில்

இன்று காலை இந்தியா பறந்தார் ரணில்

தாயின் மரணம்

இதன்போது அந்த தாய் மிகவும் கஷ்டமான நிலையிலேயே காணப்பட்டுள்ளார் இது தொடர்பில் மீண்டும் அவரது உறவினர்கள் வைத்தியர்கள், தாதியர்களிடம் சுட்டிக்காட்டியும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை எனவும் இதன் காரணமாகவே தாயின் மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மீண்டும் அவரது உறவினர்கள் வைத்தியர்கள், தாதியர்களிடம் சுட்டிக்காட்டியும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை எனவும் இதன் காரணமாகவே தாயின் மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மன்னார் வைத்தியசாலையில் அனைத்து வசதிகள் இருந்தும் அசட்டைப்போக்குக் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது குறித்த பெண்ணின் சிசுவும் உயிரிழந்தமையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்த நிலையில், உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்து மகப்பேற்று விடுதி பகுதியில் போராட்டம் நடத்தியதால் அங்கு பதட்டமான நிலையும் ஏற்பட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி: முற்றுப்புள்ளி வைத்த சபாநாயகர்

சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி: முற்றுப்புள்ளி வைத்த சபாநாயகர்

பிரதே பரிசோதனை

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற மன்னார் நீதிவான் இருவரது சடலங்களையும் பிரதே பரிசோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இருவரது மரணங்கள் தொடர்பில் மக்கள் மத்தியிலும் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மன்னார் பொது வைத்தியசாலை மீதான நம்பிக்கையையும் மக்கள் இழக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் தாய், சேய் மரணங்கள் : சுகாதார அமைச்சுக்கு பறந்த கடிதம் | Mother Death In Mannar Letter To Moh

இதற்கு முன்னரும் இதே வைத்தியசாலையில் சிந்துஜா என்ற இளம் தாய் மரணமடைந்தமை தொடர்பிலும் வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு தற்போது இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றுள்ளது.

எனவே, தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் ஏன் இடம்பெறுகின்றன என்பதனை மத்திய சுகாதார அமைச்சு மட்டத்திலும் விசாரணை செய்து குற்றவாளிகளாகக் காணப்படுவோரை தண்டிக்க வேண்டியது அவசியமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு செய்வதால் மட்டும் எதிகாலத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாது தடுக்க முடியுமென தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரவாரமின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி - பிரதமர்

ஆரவாரமின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி - பிரதமர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி