பாம்பு தீண்டி மூன்று பிள்ளைகளின் தாயார் உயிரிழப்பு - ஐயன்கன்குளத்தில் துயரம்
Jaffna
Mullaitivu
Sri Lanka
By Kiruththikan
முல்லைத்தீவு - ஐயன்கன்குளம் பகுதியில் பாம்பு தீண்டி மூன்று பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த யோகநாதன் யோகவதனி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த திங்கட்கிழமை அவருக்கு பாம்பு தீண்டி நிலையில், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பின் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி