மாணவர்களுக்கு ஹங்கேரிய புலமைப்பரிசில் - வெளியான தகவல்
Sri Lanka
Education
By Raghav
ஹங்கேரியாவின் Stipendium Hungaricum புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், 2025–2027 காலப்பகுதியில் இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது, ஹங்கேரிய வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் தொடர்ச்சியாகும்.
கல்வி வளர்ச்சி
குறித்த ஒப்பந்தத்தின் கீழ், வருடத்திற்கு 20 புலமைப்பரிசில் வாய்ப்புகள் - 8 முதலாம் பட்டப்படிப்பு, 8 பட்டப்பின் படிப்பு மற்றும் 4 கலாநிதிப் படிப்புகள் வழங்கப்படும்.

இத்திட்டம் அறிவியல், பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அமையவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி