பாடசாலை வகுப்பறையிலிருந்து மீட்கப்பட்ட 30 பாம்புக் குட்டிகள்!
குருநாகல் (Kurunegala) - போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து பாம்புக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் பாம்புகள் தென்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு அறிவித்திருந்தனர்.
சோதனை நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற அதிபர் தலைமையில் சோதனை செய்யப்பட்டதில் 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் 153 மாணவர்கள் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கின்றனர்.
இந்தநிலையில் பாடசாலை நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்தமையினால் பிள்ளைகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
