யாழ். நெடுந்தீவு கடலில் குழந்தை பிரசவித்த பெண்
யாழ்ப்பாணம் (jaffna) - நெடுந்தீவு கடலில் பெண்ணொருவர் குழந்தை பிரசவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அம்புலன்ஸ் படகு
இந்நிலையில் குறித்த பெண் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து அம்புலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
படகில் மருத்துவ அதிகாரி, மருத்துவ மாது உள்ளிட்டவர்களின் உதவியுடன் அப்பெண்ணை குறிகாட்டுவான் இறங்கு துறை நோக்கி அழைத்து வந்துள்ளனர்.
அதன்போது அப்பெண் படகினுள் குழந்தையை பிரசவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலை
தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிகாட்டுவான் அழைத்து வந்து, அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளார் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital jaffna) அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.
தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
