ஐந்து பிள்ளைகள் இருந்தும் வைத்தியசாலையில் அநாதரவாக உயிரைவிட்டதாய்
ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த தாயின் சடலத்தை ஏற்றுக்கொள்ள பிள்ளைகள் எவரும் முன்வராததால், ஹொரவபொத்தானை வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் சமய அனுஷ்டானங்களை மேற்கொண்டு, ஹொரவபொத்தானை பொது மயானத்தில் அவரது சடலத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இறந்த இந்த தாய் பல மாதங்கள் சிகிச்சைக்காக ஹொரவபொத்தானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையில் தாயை எட்டிக்கூட பார்க்காத பிள்ளைகள்
ஐந்து பிள்ளைகள் இருந்தும், நோய்வாய்ப்பட்ட இந்த தாயை பார்க்க யாரும் வராததால், யாரும் இல்லாமல் மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை விட்டுள்ளார்.
அரச செலவில் நல்லடக்கம்
ஹொரவபொத்தானை லேவசபிரி ஏரி கிராமத்தில் வசித்து வந்த இந்த தாய் இறந்துவிட்டதாக பிள்ளைகளுக்கு தெரிவிக்கப்பட்டதும் ஒரு பிள்ளை வந்து தாயை அடையாளம் கண்டுகொண்டு சிறிது நேரத்தில் காணாமல் போய்விட்டது. திரும்பி வரவே இல்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இந்த தாய்க்கு மிகுந்த அன்பையும் அக்கறையையும் அவர் இறக்கும் வரை அளித்து வந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |