சாந்தனின் மரணத்தை அறியாத தாய்
                                    
                    Jaffna
                
                                                
                    Chennai
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    தனது புதல்வனான சாந்தன் மரணடைந்த செய்தி கடுமையான சுகயீனத்தில் உள்ள அவரது மூதாள அன்னைக்கு இன்று மாலைவரை அறிவிக்கப்படாத துயரம் இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை எமது செய்தியாளர்கள் சாந்தனின் பூர்வீக இல்லம் அமைந்துள்ள உடுப்பிட்டிப் பகுதிக்குச் சென்ற போது தனது புதல்வரான சாந்தன், வீடு திரும்பவுள்ள மகிழ்ச்சியில் தாயார் இருந்ததாக உடுப்பிட்டி பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வேறு வீடொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக
தகவல் அறிந்து பலரும் செல்வார்கள் என்பதால், தாயார் தற்போது வேறு வீடொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.பி.சி தமிழ் குழுவினருக்கு அறியக் கிடைத்துள்ளது.

தனது மகன் வருவார் என ஏக்கத்திலேயே சாந்தனின் தாயார் இருந்தார் எனவும் உடுப்பிட்டி பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்