பச்சிளம் குழந்தையின் அழுகையை நிறுத்த தாய் செய்த மோசமான செயல் - கண்டுபிடித்த காவல்துறை
தொடர்ச்சியாக குழந்தை அழுது கொண்டிருந்த நிலையில் அந்த அழுகையை நிறுத்த பால்போத்தலில் மதுவை ஊற்றி தாய் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சென் பெர்னார்டினோ நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 37 வயதான ஹானஸ்டி டீ லா டோரி என்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காரில் தொடர்ச்சியாக அழுத குழந்தை

குழந்தையுடன் தாயார் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். இதன்போது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே வந்துள்ளது.கைவசம் பால், பால் பவுடர் இல்லாத நிலையில், அங்கிருந்த மதுவை பால் போத்தலில் ஊற்றிக் கொடுத்துள்ளார். குழந்தையும் பசி தாங்க முடியாமல் மதுவை குடித்து அழுகையை நிறுத்தியுள்ளது.
வாகன சோதனையில் சிக்கிய தாய்

இந்நிலையில், வழக்கமாக நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது தாயாரின் செயல்கள் சந்தேகம் ஏற்படுத்தியதை தொடர்ந்து காவல்துறையினர் குழந்தையை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையும் போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தாயிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கடந்த சனிக்கிழமையன்று கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
இதேவேளை மருத்துவர்கள் பரிசோதித்ததில் குழந்தை மதுவை குடித்து விட்டு போதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போது குழந்தை மருத்துவமனையில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.