ஓமந்தையில் தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! இருவர் படுகாயம்
வவுனியாவில் (Vavaniya) தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஓமந்தை - பறண்நட்டகல் பகுதியில் இன்று (02) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாமதமான தொடருந்து சேவை
விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், ஏ-9 வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பறண்நட்டகல் வீதிக்கு ஏற முற்பட்டபோது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தையடுத்து குறித்த தொடருந்து அரைமணிநேரம் தாமதமாகவே கொழும்பு நோக்கி பயணித்தது.
விபத்து குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
