பிலியந்தலாவின் காவல்துறையினரைத் தாக்கிய சந்தேக நபர்: கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!
பிலியந்தலை பொக்குந்தரா பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் காவல்துறையினரைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிய சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்ற பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவரில் தப்பி ஓடியவரின் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (19) அதிகாலை 1.30 மணியளவில் பொரலஸ்கமுவ, ஓ. பி. பெரேரா மாவத்தையில் உள்ள வீடு ஒன்றுக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கூர்மையான ஆயுதங்களுடன் வந்த நான்கு பேரடங்கிய கும்பல், வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்ததுடன், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கண்டுபிடிக்கபட்ட மோட்டார் சைக்கிள்
இந்த கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு வருவதாக கிடைத்த இரகசியத் தகவலின்படி காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது மோதியதுடன், பின்னால் அமர்ந்திருந்தவர் கூர்மையான ஆயுதத்தால் காவல்துறை அதிகாரியை தாக்கி உள்ளார்.
இதன்போது காவல்துறை அதிகாரி ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தப்பி ஓடினார்.
தற்போது கிடைத்த தகவலின்படி மஹரகம வீதியிலுள்ள வீடொன்றின் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் தப்பி ஓடியவரின் மோட்டார் சைக்கிள் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 11 மணி நேரம் முன்