பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த மோட்டார் சைக்கிள்கள் சிக்கின
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வீதிகளில் பயணித்த 36 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களுடன் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது போலி வாகன இலக்கத் தகடுகள், எண் தகடுகள், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கூடுதல் பாகங்களை பொருத்துதல் மூலம் போக்குவரத்து விதிகளை மீறிய 36 மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போக்குவரத்து சட்ட விதிமுறைகளை மீறி வீதிகளில் பயணம்
நேற்றைய தினம் மாத்தறை நகரில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து சோதனையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பல்வேறு ஒலி வகைகளை கொண்ட சாதனங்களை மோட்டார் சைக்கிள்களில் பொருத்தியுள்ளதோடு, போக்குவரத்து சட்ட விதிமுறைகளை மீறி வீதிகளில் பயணித்துள்ளனர்.
பயிற்சி சாரதி அனுமதிப்பத்திரங்கள்
கைதுசெய்யப்பட்ட ஓட்டுனர்கள் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், காலி, வெலிகம, அக்குரஸ்ஸ மற்றும் மாத்தறை பகுதிகளைச் சேர்ந்த குறித்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்சி சாரதி அனுமதிப்பத்திரங்களை கொண்டவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
