விவசாயத் துறை மேம்பாட்டிற்காக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை
இரு நாடுகளிலும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் இலங்கை (Sri Lanka) மற்றும் ஓமானுக்கு (Oman) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கும் (Mahinda Amaraweera) இலங்கைக்கான ஓமான் தூதுவருக்கும் இடையில் நேற்று (10) இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆராய்ச்சியாளர்களின் உத்தியோகபூர்வ விஜயங்கள், ஆய்வுகள் மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்தல் மற்றும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாடுகளுக்கு இடையிலான நட்புறவு
இலங்கையின் விவசாயத் துறையின் அபிவிருத்திக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை விவசாய அமைச்சர் மதிப்பீடு செய்து இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்குவார் என ஓமான் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓமானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை என அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.
அத்துடன் இது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |