இலங்கையில் பி சி ஆர் பரிசோதனைக்கான மலைக்கவைக்கும் செலவு வெளியானது
இலங்கையில் கொரோனா தொற்று தொடங்கிய காலப்பகுதியிலிருந்து இதுவரை நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனைக்காக அரசாங்கம் ரூபா 6.48 பில்லியனை செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் தொடங்கிய கொரோனா தொற்றை அடுத்து நேற்றுவரை 1,486,951 பேருக்கு பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் 22 அரசு நிறுவனங்கள் மற்றும் 7 தனியார் மருத்துவமனைகள் பி.சி.ஆர் சோதனைகளை நடத்துகின்றன. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் 175,741 பி சி ஆர் பரிசோதனைகளையும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட ஆய்வகம் 139,981 பி.சி.ஆர் பரிசோதனைகளையும் நடத்தியுள்ளது. இலங்கையில் கொவிட் தொற்றால் நேற்றுவரை 264 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் 53,000 க்கும் மேற்பட்டோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். you may like this