நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கை
மோதலில் தீர்க்கப்படாத மனித உரிமைகள் பிரச்சினைகளை கையாள்வதற்காக தேசிய பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை நிலைமாற்று கால நீதிச் செயற்பாடுகளை ஏமாற்றும் மற்றுமொரு அரசியல் ரீதியான ஏமாற்று நடவடிக்கையாகும்.
மோதல்களுக்குப் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை பல்வேறு அரசாங்கங்களின் கீழ் பல சுயாதீன விசாரணைக் குழுக்களையும், ஆணைக்குழுக்களையும் நிறுவியுள்ளது.
சுயாதீனமான தேசியப் பொறிமுறை
அந்த ஆணைக்குழுக்களின் அனைத்துப் பரிந்துரைகளும் இருக்கதக்க மீண்டும் மீண்டும் புதிய ஏற்பாடுகளை ஸ்தாபிப்பதற்கு முயற்சிப்பதானது வெறும் அரசியல் ரீதியான உபாயமாகும் என்பதோடு மக்கள் ஆணையற்ற தற்போதைய அரசாங்கம் தமிழ் சமூகத்தின் தீர்வுக்கான உண்மையான எதிர்பார்ப்புகளை காலம் தாழ்த்தும், அவதானங்களை திசை திருப்பும் பயனற்ற முயற்சியாகும்.
தீர்வுக்கு ஒரு அர்த்தமுள்ள வழியாக ஒரு சுயாதீனமான தேசியப் பொறிமுறையை ஸ்தாபித்து தேவையான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக தற்போதைய அதிபர் அன்று பிரதமராக செயற்பட்ட கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு வாக்குறுதியளித்து தெளிவான பொறிமுறைக்கட்டமைப்பொன்று நிறுவப்பட்டது.
இதன் பிரகாரம், நல்லிணகப்பொறிமுறைகளை கூட்டிணைப்பதற்கான செயலகம் நிறுவப்பட்டு, விசேட வழக்குத் தொடுப்பவரை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறை, உண்மை,நீதி,நல்லிணக்கம், மீள் நிகழாமை தொடர்பான ஆணைக்குழு, காணாமல் போனோர் அலுவலகம்,இழப்பீட்டு அலுவலகம் என நான்கு உள்ளக கட்டமைப்புப்புகள் நிறுவப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டு இரு கட்டமைப்புகள் இதன் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
ஏலவே இவ்வாறு நிறுவப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம்,இழப்பீட்டு அலுவலகங்களை வலுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் கடந்த இரு ஆண்டுகாலமாக மந்த நிலையை கடைப்பிடித்து வருவதிலிருந்து மீண்டு இக்கட்டமைப்புகளை மேலும் வினைத்திறனாக ஸ்தானப்படுத்துவதில் கவனம் செலுத்துதல் ஏற்புடையது.
அரசினது பொறுப்புணர்வு சார்ந்து ஏலவே வாக்குறுதியளிக்கப்பட்ட உண்மை, நீதி,நல்லிணக்கம், மீள் நிகழாமை தொடர்பான ஆணைக்குழுவை நிறுவி அதனை முன்னோக்கி கொண்டு செல்வதிலையே அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
நிலைமாறு கால நீதிச் செயற்பாடு
அதிபர், பிரதமர் அடங்கலாக ஒரு கூட்டுப் பிரேரணையாக அமைச்சரவை ஒப்புதல் அளித்தாலும் நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை இரண்டாம் நிலை வகிபாகமொன்று இட்டுச்செல்லாமல் இருக்கும் விடயத்திலும் அரச பொறுப்புணர்வு சார்ந்து காலம் தாழ்த்தலுக்கான உபாயமாகவும் அமையாதிருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
பருவகால அரசாங்கங்களின் “காலம் தாழ்த்தலின்”தொடர்ச்சியான ஓர் நீட்சியாகவே இந்த தேசிய பொறுப்புக்கூறல் பொறிமுறையையும் பார்க்க வேண்டியுள்ளது.
அரசியல் சூழல்களுக்கும், அரசியல் தலைவர்களின் விருப்பார்வங்களுக்குள்ளும் இந்த நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகள் சிக்காமல் இருப்பதில் நாமனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கையில் நிறுவப்பட்ட பருவகால பொறிமுறைகள் எந்தளவு தூரம் செயல்முறையை நோக்கிச் சென்றுள்ளது என்பதில் உண்ணிப்பாக அவதானத்தை செலுத்தி இதை நோக்க வேண்டும் என்பதோடு,அரசின் பொறுப்புணர்வு தேச நலனை சக்திப்படுத்துவதாகவே அமைய வேண்டும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்