யேமான் அரச படைகளின் நகர்வு! தொடர்ந்து தாக்கி கொழல செய்யப்படும் ஹவுதிக்கள்
ஈரான் ஆதரவு பெற்ற தாக்குதல் அமைப்பான ஹவுதிக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் 218 ஹவுதி அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளதாக யேமன் அரசாங்கப் படைகள் தெரிவித்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 750-க்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் மூலம் இந்த முறியடிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 78 வாகனங்களை அழித்ததாகவும் அல்லது செயலிழக்கச் செய்ததாகவும் யேமன் அரசாங்கப் படைகள் தெரிவித்துள்ளன.
விநியோக வழிமுறை
முன்னேறிய களக் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ஆளும் அமைப்புகள், கோட்டைகள், தாக்குதல் மூலங்கள், கூட்டங்கள், போராளிக் குழுக்களின் வலுவூட்டல்கள் மற்றும் அவற்றின் நகர்வு மற்றும் விநியோக வழிமுறைகள் ஆகியவற்றை இந்த நடவடிக்கைகள் குறிவைத்தன என்று யேமன் ஆயுதப் படை தரப்புக்கள் கூறியுள்ளன.

அத்தோடு நேற்றைய தினம் இடம்பெற்ற தாக்குதலில் 300 ஹவுதி உறுப்பினர்களை ஒரே நாளில் தாக்கி கொலை செய்ததாக யேமன் அரசாங்கப் படைகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |