குருக்கள்மட இராணுவ முகாம்கள் குறித்து சாணக்கியனின் அதிரடி அறிவிப்பு
குருக்கள்மடம் பாடசாலை கட்டடத்தில் இயங்கி வருகின்ற இராணுவ முகாம் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சமரின் இறுதிப்போட்டி நேற்று (05) இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறுக்கல்மடம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “குருக்கள்மடம் இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் நாம் ஜனாதிபதியுடன் மூன்று தடவைகள் இது தொடர்பில் பேசியிருக்கின்றோம்.
இங்கு அமைந்திருக்கின்ற இராணுவத்தினருடன் எனக்கு எது வித கோபங்களும் இல்லை குறுக்கல்மடம் கிராமத்திலே இருக்கின்ற மைதானத்தை விஸ்தரிக்க வேண்டும்.
அதன் அறிக்கையை அமைந்திருக்கின்ற பாடசாலை கட்டிடத்தில் கட்டடத்திலேயே இருக்கின்ற இராணுவ முகாமை இருக்கின்ற பாடசாலை கட்டிடத்தை மீட்டெடுக்க வேண்டும்.
சிறுவர் பூங்கா
அதில் அருகில் இருக்கின்ற சிறுவர் பூங்காவை புனலகத்தில் செய்ய வேண்டும் போன்ற காரணத்தால் அதிலே அமைந்திருக்கின்ற இராணுவத்தினரை அகற்றுமாறு தெரிவிக்கின்றமே தவிர மாறாக அங்கிருக்கின்ற இராணுவத்தினிடம் எங்களுக்கு எது வித கோபங்களும் இல்லை.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி கடந்த பாதுகாப்பு அமைச்சு தொடர்பான நடைபெற்ற கூட்டத்தில் உரையாடி இருக்கின்றார்.
அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற குருக்கள்மடம் இராணுவமுகாம், பாலையடிவட்டை இராணுவமுகாம், முறக்கொட்டாஞ்சேனை இராணுவமுகாம் மற்றும் காயங்கேணி இராணுவமுகாம் ஆகிய நான்கு இடங்களில் இருக்கின்ற இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் ஒரு மாத காலம் இடைவெளி தருமாறு ஜனாதிபதி கேட்டிருக்கின்றார்.
இராணுவ முகாம்
இந்தநிலையில் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளது.
இருப்பினும், தாங்கள்தான் இராணுவ முகாம்களை அகற்றுவதற்காக குரல் கொடுத்ததாக பலர் வந்து தற்போது கருத்துத் தெரிவித்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.
அது எனக்கு பிரச்சனை இல்லை இது எவ்வாறு இருந்தாலும் இராணுவ முகாம் அகற்றப்பட்டால் போதுமானது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
