அர்ச்சுனாவின் சமீபத்திய போக்கு: மனோ கணேசன் மறைமுகமாக கூற வந்த செய்தி
அண்மைய காலமாக வடக்கு அரசியலில் மட்டுமல்லாது தென்னிலங்கை அரசியலிலும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாரிய விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போதும் கூட இராமநாதன் அர்ச்சுனா செயற்பட்ட விதம் மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகரிடமே கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டிருந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உட்பட அமைச்சர் சந்திசேகர் உடனும் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டிருந்தார்.
இவ்வாறனதொரு பின்னணியில், இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த நாடாளுமன்ற ஊறுப்பினர் மனோ கணேசன்,
“குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் கருத்து தெரிவிக்க தான் விரும்பவில்லை என கூறி, அவர் கூரையை கிழித்துக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக குதிக்கவில்லை என்றும் மக்கள் தெரிவினால் வந்தவர் எனவும் வாக்களித்த மக்களை நினைத்தாவது பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)