அநுர அரசுக்கு எதிராக ஒன்றிணைய எதிர்க்கட்சிகளை அழைக்கும் எம்.பி
அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களில் சபைகளை நிறுவுவதற்கு அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர(daya siri jayasekara) அழைப்பு விடுத்துள்ளார்.
சபைகளின் தவிசாளர் அல்லது பிரதி தவிசாளர் பதவியைப் பற்றி சிந்திக்காமல், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஒன்றுபட வேண்டும் என்றும் தயாசிறி ஜெயசேகர கூறினார்.
நாட்டிற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும்
அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லாத சபையாக பண்டுவஸ்நுவர பிரதேச சபை, எதிர்க்கட்சி அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் நாட்டிற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும் என்று தெரிவித்தார்.
அனைத்து சபைத் தலைவர்களும் உறுப்பினர்களும் தங்கள் பதவிக் காலத்தில் எந்தவொரு மோசடி அல்லது ஊழலிலும் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும்தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டார்.
"பண்டுவஸ்நுவர பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 17 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. எதிர்க்கட்சிக்கு 21 இடங்கள் உள்ளன. அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுடன் இந்த சபையை நாம் உருவாக்க முடியும்."
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
