யுத்த குற்றவாளிகளை பாதுகாத்த சுமந்திரன்: தமிழரசு கட்சியை குற்றஞ்சாட்டும் கஜேந்திரன் எம்பி
2025 ஆம் ஆண்டிலிருந்து ஜெனீவா வரை சென்று பொறுப்புக்கூறலை முடக்கி சர்வதேச விசாரணை என்ற பெயரிலே யுத்த குற்றவாளிகளை பாதுகாத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வாழ்வு கண்ணீரோடு அழைவதற்கு சுமந்திரனுடைய(M.A.Sumanthiran) செயல்பாடுகள் தான் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்(Selvarajah Kagendran) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பசப்பு வார்த்தைகளை நம்பி தமிழ் மக்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முடிகளும் பாரிய அழிவிலும் மீண்டும் ஒரு காணாமல் ஆக்கப்படும் யுகம் என்ற வாழ்க்கைக்குள் கொண்டு செல்லப்படும்.
ஆகவே இவர்களுடைய கருத்தை புறக்கணித்து இந்த தேர்தலை முற்றாக புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, இவர்கள் அனைவருமே தமிழர்களின் வலிமைமிக்க சக்தியை தோற்கடிக்க சதிதிட்டம் தீட்டுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை காண கீழுள்ள காணொளியை பார்வையிடுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |