npp நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிடியாணை
தேசிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை, அதன் முன் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளில் முன்னிலையாகத் தவறியதற்காக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த இரண்டு வழக்குகளும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக 2008 முதல் நிலுவையில் உள்ளன.
கைது செய்து முற்படுத்துமாறு நீதவான் பிடியாணை
வழக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அன்று, அவரது வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் நிலத்தை விநியோகிக்கும் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் முன்னிலையாக முடியவில்லை என்று கூறினார்.

இருப்பினும், வழக்கு இன்று (02) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்திற்கு வருகை தராததால், அவரை உடனடியாகக் கைது செய்து முற்படுத்துமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |