நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Colombo Namal Rajapaksa Law and Order
By Sathangani Oct 16, 2026 04:49 AM GMT
Report

புதிய இணைப்பு

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரும் தொழிலதிபருமான ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரின் விளக்கமறியலையும் இம்மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Mp Namal Rajapaksa Produced Before Court

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு

இதேவேளை சந்தேக நபரான ஜானகி சிறிவர்தன தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நீதவான் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Mp Namal Rajapaksa Produced Before Court

அத்துடன் நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவு இன்னும் தயாரிக்கப்படாததால், அது அடுத்த வழக்கு விசாரணை நாளில் அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம குறிப்பிட்டுள்ளார்.

கிரிஷ் நிறுவனத்தின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வகையில் 70 மில்லியன் ரூபாய் பணத்தை இலஞ்சமாக வழங்கியமை மற்றும் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஷிரந்தி தொடர்பில் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

ஷிரந்தி தொடர்பில் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

முதலாம் இணைப்பு

சற்றுமுன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட நாமல்!

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (16) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்தநிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக, சிறைச்சாலை அதிகாரிகள் நாமல் ராஜபக்சவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

கிரிஷ் ஒப்பந்த நிதி மோசடி : தொழிலதிபரின் அறிவிப்பு

கிரிஷ் ஒப்பந்த நிதி மோசடி : தொழிலதிபரின் அறிவிப்பு

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு:உறுதியான பதிலை வழங்காத ஜனாதிபதி செயலாளர்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு:உறுதியான பதிலை வழங்காத ஜனாதிபதி செயலாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016