பேஸ்புக் பதிவால் சி.ஐ.டி-க்கு அழைக்கப்பட்ட அர்ச்சுனா
CID - Sri Lanka Police
Ramanathan Archchuna
By Jaso
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி இருந்த நிலையில், சற்றுமுன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
பேஸ்புக் பதிவொன்று தொடர்பில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் அளிக்க அவர் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற அமர்வில் தமிழ் ஈழ மக்கள் என பேசியது தொடர்பாக தென்னிலங்கை கட்சி வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய சிஐடியில் முன்னிலையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி