புலம்பெயர் மக்களுக்கு தமிழர் பிரதேசத்திலிருந்து பறந்த அவசர கோரிக்கை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan), புலம்பெயர் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (07) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது பிரதேசங்களில் அபிவிருத்தி குன்றி காணப்படுகின்ற இடங்களில் கல்விசார அபிவிருத்திகள் பௌதிகவளம் சார்ந்த செயற்பாடுகள், போன்றவற்றை முன்னெடுக்கப்படும் இடத்தில் பங்களிப்புகளை சரியானவர்களிடம் கொடுக்கின்ற போது அவர்கள் வீண்விரயம் இல்லாமல் அபிவிருத்தியை அந்தந்த பிரதேசங்களில் செய்ய முடியும் என்பதை நான் இச்சந்தர்ப்பத்தில் புலம்பெயர் மக்களிடம் தெரிவிக்கின்றேன்.
குடிநீர் வழங்குதல் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான படிப்பகங்களை அமைத்தல் பாடசாலைகளுக்கு உதவி செய்தல், சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்களுக்கு புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற எமது உறவுகள் உதவிகளை மேற்கொள்கின்ற இடத்தில் எமது சமூகத்தை மேலும் துரிதமாக வளர்த்துக் கொள்வதற்கு உரிய பங்களிப்பாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்தும் மக்களின் வாழ்வாதாரம் குறித்தும் அவர் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
