தமிழினத்தின் சாபக்கேடு என யார்..! முகத்திரையை கிழித்த அர்ச்சுனா எம்.பி
உலகத் தமிழ் மாநாடு நடந்த காலப்பகுதியில் மேடைப் பேச்சுக்களில் இளைஞர்கள் சிங்கள மக்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போராட வேண்டும் என்ற கருத்துக்களை தமிழ் தலைமைகள், தமிழ் மக்களிடையே விதைக்க ஆரம்பித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
கடந்த 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
இந்த கருத்தில் இருப்பக்கங்கள் உள்ளது, முதலாவது அன்று தமிழினத்திற்காக, தங்களது உரிமைக்காக, தங்களது மக்களுக்காக குரல் கொடுத்த இளைஞர்கள் அதற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் ஆயுதம் ஏந்த வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.
இதில் கட்டாயப்படுத்தப்பட்டு வற்புருத்தப்பட்டு இளைஞர்கள் இணைக்கப்பட்டார்களா என்பதை தாண்டி தங்களது மக்களுக்காக குரல் எழுப்ப தமிழ் தேசியம் என்ற ஒற்றை வார்த்தையில் அவர்கள் ஊறி ஆயுதம் ஏந்தியிருந்தார்கள் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
அன்று அவர்கள் ஆயுதமேந்தியதன் எதிரொலிதான் இன்று உள்நாட்டில் மட்டும் அல்ல சர்வதேசத்திலும் தமிழ் தேசியம் என்ற ஒரு விடயம் பாரிய அளவில் மார்தட்டி பெருமை கொள்ளும் அளவிற்கு வெகுவாக அபார வளர்ச்சி கண்டுள்ளதுடன் வராலாறு படைத்த வீர தமிழர்கள் என்ற பெயரையும் நிலைநாட்ட செய்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் இதில் உற்றுநோக்கப்பட வேண்டிய இரண்டாவது விடயம், தமிழ் தேசியம் என்ற போர்வையில் யுத்த காலம் தொட்டு இன்றுவரை சாமர்த்தியமாக தமிழ் மக்களை முட்டாள்களாக்கி அரசியல் செய்யும் தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் திருவிளையாடல்.
அரசியல் சுய இலாபத்திற்காகவும், தங்களை தொடர்ந்து அரசியலில் நிலைநாட்டி கொள்வதற்காகவும் மற்றும் தங்களது அரசியல் எதிர்காலத்திற்காகவும் தமிழ் தேசியம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து தங்களது காலத்தை கடத்துகின்றனர்.
இவ்வாறு அரசியலை கொண்டு செல்லும் தமிழ் தலைமைகள் தொடர்பிலும், அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்துக்களின் பின்னணி குறித்தும், தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் மற்றும் பலதரப்பட்ட அரசியல்சார் விடயம் தொடர்பில் ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
