பின்வீதி வழியாக வெளியேற முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கினர் (காணொளி)
Parliament of Sri Lanka
SL Protest
By Vanan
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பின்வீதி வழியாக வெளியேற முற்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும் மற்றொரு வீதியின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற முற்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை மறித்து அவர்களை வெளியேற விடாமல் தடுத்து, பிரதான நாடாளுமன்ற நுழைவு வீதி வழியாக வெளியேறுமாறு கோரினர்.
இதேவேளை, அடுத்த நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் மே 17 ஆம் திகதி வரை நாடாளுமன்றத்திற்கு வெளியில் நடத்தப்படும் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.




ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்