எம்பிக்களுக்கு பேரிடி : நாடாளுமன்றம் வருகிறது ஓய்வூதிய ஒழிப்பு சட்டமூலம்
Parliament of Sri Lanka
Bimal Rathnayake
Jagath Wickramaratne
By Sumithiran
எம்.பி.க்களின் ஓய்வூதிய ஒழிப்பு சட்டமூலம் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விவாதத்திற்கு உட்படுத்தப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விவாதத்தின் அதே நாளில் சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற விவகாரக் குழுவில் முடிவு செய்யப்பட்டதாக சபைத் தலைவர் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெற்ற சபாநாயகர்
எம்.பி.க்களின் ஓய்வூதிய (ஒழிப்பு) சட்டமூலம் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெற்றதாக சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தார்.

சட்டமூலத்தின் எந்த விதியும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணானது அல்ல என்றும், சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 3 மணி நேரம் முன்
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்