ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்த எம்.பிக்கள் ....பொதுத் தேர்தலில் இரண்டாக பிளவு

SLPP Ranil Wickremesinghe Sajith Premadasa General Election 2024 Sri Lanka General Election 2024
By Sathangani Sep 28, 2024 05:33 AM GMT
Report

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது தேர்தலில் யாருடன் இணைவது குறித்து தீர்மானம் எடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியைப் (UNP) பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தரப்பினருக்கும் இடையே எதிர்கால அரசியல் செயற்பாடு தொடர்பில் நேற்று (27) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் செயற்பாடு வரலாற்று துரோகம் : பிரித்தானிய கிளை கடும் கண்டனம்

தமிழரசுக் கட்சியின் செயற்பாடு வரலாற்று துரோகம் : பிரித்தானிய கிளை கடும் கண்டனம்

பிரதமர் வேட்பாளர் 

இதன்போது, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பொதுஜன பெரமுனவில் இணைவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்த எம்.பிக்கள் ....பொதுத் தேர்தலில் இரண்டாக பிளவு | Mps Who Supported Ranil Will Be Join Slpp And Sjs

எனினும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் (SJS) இணைவதற்குத் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் ஆளுநர் நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake), எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய வேண்டும் எனவும் அவ்வாறு கூட்டணி ஒன்று உருவாக்கப்படுமாயின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேதாசவே (Sajith Premadasa) இருப்பார் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இங்கு கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando), இரு தரப்பினரும் இணைய வேண்டும் என தாம் விரும்புவதாகவும் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதுடன் அனைவரும் நாட்டுக்காக ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியில் நிரந்தர அரசியல்வாதிகள் நீக்கப்படுவார்கள் - சூளுரைக்கும் சுமந்திரன்

தமிழ் அரசுக் கட்சியில் நிரந்தர அரசியல்வாதிகள் நீக்கப்படுவார்கள் - சூளுரைக்கும் சுமந்திரன்

வலதுசாரி கூட்டணி

மேலும், குறித்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தங்களது தரப்பு மீண்டும் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தரப்பினருடன் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்துரைத்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga), தங்களது தரப்பு வலதுசாரி கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்த எம்.பிக்கள் ....பொதுத் தேர்தலில் இரண்டாக பிளவு | Mps Who Supported Ranil Will Be Join Slpp And Sjs

அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள தரப்பினரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த தரப்பினரும் இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் வலதுசாரி கொள்கையை உடைய கட்சியாகும். எனவே அவர்களுடன் இணைவதில் எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தல் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தீர்மானம்

பொதுத் தேர்தல் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தீர்மானம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024