தந்தையை காப்பாற்றுங்கள் : இம்ரான்கானின் மகன்கள் ட்ரம்பிடம் கோரிக்கை
பாகிஸ்தான்(pakistan) சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது தந்தை இம்ரான்கானை (imran khan)காப்பாற்றுமாறு அவரது மகன்கள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம்(donald trump) கோரிக்கை விடுத்துள்ளனர்.
லண்டனில் வசிக்கும், இம்ரானின் மகன்கள் சுலைமான் கான் மற்றும் காசிம் மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மரண அறையில் இருக்கிறார்
தங்கள் தந்தை குறைந்தபட்ச உரிமைகள் கூட இல்லமால் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் இம்ரான் கான் சிறைச் சூழல் குறித்து பேசிய அவர்கள், "அவர் ஒரு மரண அறையில் இருக்கிறார், வெளிச்சம் இல்லை, வழக்கறிஞர் இல்லை, மருத்துவர் இல்லை, இருப்பினும் அவர் உடைந்து போகவில்லை" என்று தெரிவித்தனர்.
அரசியல் நோக்கம் கொண்ட வழக்குகள்
அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஆராய்ந்தால், அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகும். ஜனநாயகத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் ஆதரிக்கும் எந்தவொரு அரசாங்கமும் எங்கள் தந்தையை விடுவிக்க ஆதரிக்கும். குறிப்பாக உலகின் மிகவும் பிரபலமான தலைவரான டிரம்ப்பின் உதவியை நாடுவோம்" என்று கூறினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
