பட்டைத் தீட்டப்படும் பத்திரன - என் துடுப்பாட்ட வாழ்வின் இறுதிகட்டம் - டோனி
தன் துடுப்பாட்ட போட்டி வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருப்பதாக சிஎஸ்கே அணி தலைவர் டோனி பேசி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
இது குறித்து போட்டிக்கு பிறகு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பேசிய டோனி ''நான் இன்று சிறப்பான ஒரு பிடியெடுப்பை பிடித்தேன் ஆனால் எனக்கு ஏன் பரிசு தரவில்லை" என்று கேளிக்கையாக கேட்டுள்ளார்.
துடுப்பாட்ட போட்டி வாழ்க்கை
இதை தொடர்ந்து பேசிய டோனி, "என்னுடைய துடுப்பாட்ட போட்டி வாழ்க்கையில் தற்போது கடைசி கட்டத்தில் இருக்கின்றேன்.
இதனால் ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் முன் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
சென்னை ரசிகர்கள் எனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுத்திருக்கிறார்கள். போட்டி முடிந்தாலும் நான் என்ன பேசுவேன் என்று கேட்பதற்காகவே மைதானத்தில் காத்திருக்கிறார்கள்.
நான் எப்போதுமே பந்துவீச்சாளர்களிடம் இப்படி வீரர்களை நிறுத்துகிறேன், அதற்கு ஏற்றால் போல் பந்து வீசவேண்டும் என்று சொல்ல மாட்டேன்.
பதிரான
சில சமயத்தில் சில துடுப்பாட்ட வீரர்கள் வித்தியாசமாக விளையாடினால் அப்போது மட்டும் அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். மற்றபடி எந்த இடத்தில் எந்த வீரர்கள் வேண்டும் என்று பந்துவீச்சாளர்களை முடிவு செய்ய முழு சுதந்திரம் வழங்குவேன்.
பிராவோ மட்டும் தான் பில்டர்களை நிறுத்தும் விசயத்தில் என்னுடன் சண்டை போடுவார். மலிங்கா தன்னுடைய வித்யாசமான பந்துவீச்சு முறையால் பிரபலமானார் அதேபோன்று பதிரானவும் செயல்படுகிறார்.
அவர் பந்து வீசும் முறையை கணித்து அடிப்பது கடினமாகும். எனினும் எங்களுடைய சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வெற்றியை தேடி தந்தார்கள்.
விக்கெட் காப்பாளர் ஸ்டம்பிங் செய்வதற்கு திறமை மட்டுமே இருந்தால் போதாது. சில சமயம், சரியான இடத்தில் நாம் இருக்க வேண்டும்.
எப்போதுமே தயார் நிலையில் விக்கெட் காப்பாளராக செயல்பட வேண்டும். இது அனுபவம் மூலம் தான் கிடைக்கும்.
எனக்கும் வயது ஆகிவிட்டது. அதனை மறுக்க முடியாது." என தெரிவித்தார்.
Sri Lankan fans, you might have got a gem in Pathirana. Dhoni is preparing him for you! ?
— Harsha Bhogle (@bhogleharsha) April 21, 2023
மேலும் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது டுவிட்டர் பதிவில் "இலங்கை ரசிகர்களே, பதிராணா என்றொரு வைரத்தை தோனி உங்களுக்காக பட்டைத் தீட்டி கொண்டிருக்கிறார்" என தெரிவித்துள்ளார்
