தோனியின் ஜெர்ஸி நம்பர்..! பி.சி.சி.ஐ எடுத்த அதிரடி முடிவு
எம்எஸ் தோனி கிரிக்கெட்டுக்கு செய்துள்ள பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், அவரின் ஜெர்ஸி எண் 7க்கு இந்திய கிரிக்கெட் அணி ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி, 2007ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை, 2011ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பை, 2013ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணிக்கு அவர் வென்று கொடுத்துள்ளார்.
இதன் மூலமாக மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுகொடுத்த ஒரே இந்திய கப்டனாக எம்எஸ் தோனி விளக்கியுள்ளார், இந்தத் தன்னிகரில்லா கப்டன் கடந்த 2020ம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
7 என்ற எண்ணும் பிரபலம்
ஆனால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார், கடந்த 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை அணியின் கப்டனாகவும் இருந்து வரும் தோனி, இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
எம்எஸ் தோனியை போலவே அவரின் ஜெர்ஸியில் இருக்கும் 7 என்ற எண்ணும் மிகவும் பிரபலம், இதுவரை அந்த எண் கொண்ட ஜெர்ஸியை மட்டுமே அணிந்து அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வந்துள்ளார்.
இந்திய வீரர் யாரும் பயன்படுத்த முடியாது
இதனால் எம்எஸ் தோனி கிரிக்கெட்டுக்கு செய்துள்ள பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், அவரின் ஜெர்ஸி எண் 7க்கும் இந்திய கிரிக்கெட் அணி ஓய்வு அளித்துள்ளது.
இதனால் இனிமேல் ஜெர்ஸி '7' ஐ இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது.
இதற்கு முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரை கௌவுரவிக்கும் வகையில் அவரின் 10ம் எண் ஜெர்ஸிக்கு இந்திய கிரிக்கெட் அணி ஓய்வினை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |