கொரோனாவிலிருந்து மீண்டார் முஜிபுர் ரஹ்மான்
corona
home
return
mujibur rahman
By Sumithiran
கொரோனா தொற்றுக்குள்ளான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பூரண குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அவருக்கு தொற்று உறுதியாகிய நிலையில் உடனடியாக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் பூரண குணமடைந்து நேற்று மாலை வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மனைவி, பிள்ளைகள் என வீட்டாருக்கு மத்தியில் தாம் தொடர்ந்தும் தனிமையில் இருப்பதாக அவர் ஊடகமொன்றுக்கு இன்று குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை நாடாளுமன்றத்தில் கொவிட் தொற்றுக்கு இலக்காகிய 12 உறுப்பினர்களில் 11 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்