நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் பதவியேற்பு
புதிய இணைப்பு
முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
அவர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையிலேயே இன்று (10) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.
அவர் இன்று (10.5.2024) காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத்தின் பின்னர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே, இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அமரக்கூடிய சட்டத் தகைமை எதுவும் கிடையாது என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் (08) தீர்ப்பளித்துள்ளது.
வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவி
அதேவேளை, அவருக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (09.5.2024) தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதால் வெற்றிடமான ஐக்கிய மக்கள் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை (Mujibur Rahman) நியமிக்க கட்சி தீர்மானித்தது.
எவ்வாறாயினும் டயானா கமகேவிடம் இருந்து வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவிக்கு பொருத்தமான பெண் ஒருவரை நியமிக்குமாறு இலங்கை மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர் மன்ற தலைவி, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |