முல்லைத்தீவில் ஐஸ், போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
Sri Lanka Police
Mullaitivu
Sri Lanka Police Investigation
By Shadhu Shanker
முல்லைத்தீவில் ஐஸ் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்றையதினம்(8) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முல்லைத்தீவு விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் முள்ளியவளை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் எனவும் , இவரிடம் இருந்து 486 காெக்கேன் போதை மாத்திரைகளும், 34 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் நேற்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்