முல்லைத்தீவில் இராணுவ முகாம்களில் இருந்து அதிரடியாக வெளியேறிய இராணுவத்தினர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் பல காணிகளில் முகாம்களை
அமைத்துத் தங்கியிருந்தனர் தற்போது அதனை அகற்றிவிட்டு
இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
அவ்வாறு இராணுவத்தினர் வெளியேறிச் செல்லும்போது, தாம் முகாம் அமைத்திருந்த காணிகளை வனவளத் திணைக்களத்திடம் கையளித்துவிட்டு வெளியே சென்றுள்ளனர்.
அவ்வாறு வனவளத்திணைக்களத்திடம் இராணுவத்தினர் கையளித்த காணிகள், அபிவிருத்திவேலைகளுக்காகவோ அல்லது, ஏனைய -முக்கிய தேவைகளுக்காகவோ தேவைப்பட்டால், தேவைகளைச் சுட்டிக்காட்டி வனவளத்திணைக்களத்திடமிருந்து காணிகளைப் பெற்றுக்கொள்ளமுடியுமென முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாம கேஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் வெளியேற்றம்
கடந்த பெப்ரவரி அன்று (16) இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே அவர் இந்த தகவலைத் அவர் தெரிவித்திருந்தார்.
தாமும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பங்கேற்றிருந்த விசேட கூட்ட மொன்றிலேயே மேற்குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
எனினும் இராணுவத்தினர் பல அரச காணிகளிலிருந்து வெளியேறி இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.இன்னும் பல தனியார் காணிகளில் இராணுவத்தினரின் முகங்கள் அமைந்துள்ளனர்.
அதேபோல இராணுவத்தினர் வெளியேறி உள்ள காணி விவரங்கள் தொடர்பில் மாவட்ட செயலகத்தாலோ வனவளத்திணைக்களத்தாலோ எந்த ஒரு புள்ளி விவரங்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |