முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் பிக்குவின் அடாவடி: கொடூரமாக தாக்கப்பட்ட விவசாயி
முல்லைத்தீவு (Mullaitivu) - குருந்தூர்மலை அடிவாரத்தில் விவசாயம் மேற்கொண்ட காணி உரிமையாளர் ஒருவர் குருந்தூர்மலை விகாராதிபதியால் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (10.05.2025) காலை இடம்பெற்றள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குருந்தூர் மலையில் கீழாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான நிலங்களை பௌத்த பிக்கு தொல்லியல் திணைக்களத்தின் துணையோடு ஆக்கிரமித்து வைத்துள்ளார்.
குருந்தூர்மலை
இந்த காணிகளுக்கு அண்மையாக இன்று காலை குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் குறித்த காணியின் உரிமையாளர் ஒருவர் தனது பணியாட்கள் மூலம் உழவு செய்துள்ளார்.
இதன்போது அவ்விடத்துக்கு வருகை தந்த குருந்தூர்மலை பௌத்த பிக்கு கல்கமுவ சாந்த போதி மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர், காவல்துறையினர் இணைந்து விவசாய நடவடிக்கைகளை தடுத்ததோடு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளையும் கைது செய்து உழவியந்திரத்தினையும் முல்லைத்தீவு காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த காணியின் உரிமையாளர் இதய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் பணியாளர்கள் மூலமாக விவசாய நடவடிக்கைக்கு ஆயத்தங்களை மேற்கொண்ட போதே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு பணியாளர்களான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
