காவல்துறைக்கு கிடைத்த தகவல் : முல்லைத்தீவில் இளைஞர் கைது!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அறுக்கப்பட்ட பெறுமதியான பலகையுடன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(4) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
கொலனி பகுதியில் சட்டவிரோதமாக மரம் அறுக்கப்பட்டு பலகையாக்கப்படுவதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது.
இதற்கமைய குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் முதிரை,பாலை மரங்கள் அறுக்கப்பட்ட நிலையில் தனியார் காணி ஒன்றில் காணப்பட்டுள்ள போது அதனை மீட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இது தொடர்பில் மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய நபர் ஒருவரை கைதுசெய்துள்ளார்கள்.
சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துரறயினர் ஈடுபட்டுள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |