ஐ.நா நல்ல தீர்வைத் தரும் எனக் காத்திருக்கின்றோம்!
srilanka
protest
mullaitivu
northern
By Vasanth
ஐக்கிய நாடுகள் சபை நல்ல தீர்வு தரும் வரை காத்திருக்கிறோம் என முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 1477 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் இலங்கை அரசாங்கம் எங்களுக்கு எந்த தீர்வையும் தராது எனவும் ஐக்கிய நாடுகள் சபை எமக்கு ஒரு நல்ல தீர்வு தரும் என காத்திருக்கிறோம் எனவும் தெரிவிக்கின்றனர்.


