இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாப்புலவு காணி விடுவிப்பு கோரி போராட்டம்!

Sri Lanka Army Mullaitivu SL Protest
By Shan Jul 04, 2026 11:02 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழர் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளையதினம் (05) இடம்பெறவுள்ள குறித்த போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பேதங்களை கடந்து ஆதரவு வழங்க வேண்டும் என முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞா.யூட்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவரால் இன்றையதினம் (04.06.2026) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர் மக்களுக்கு சொந்தமான பல பூர்வீக காணிகள் யுத்த காலத்தின் பின்னர் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டன.

சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை : 313 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம்

சுங்கத் திணைக்களத்தின் தொடர் சாதனை : 313 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம்

 தொடர் போராட்டங்கள்

யுத்தம் முடிவடைந்து பதினேழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அந்தக் காணிகள் முழுமையாக உரிய மக்களிடம் மீள ஒப்படைக்கப்படாதது மிகுந்த கவலையளிக்கும் விடயமாகும்.

தமது பூர்வீக நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்த மக்கள் பல ஆண்டுகளாக அமைதியான ஜனநாயக வழியில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாப்புலவு காணி விடுவிப்பு கோரி போராட்டம்! | Mullaitivu People S Lands Under Military Control

தங்களது சொந்த நிலங்களில் வாழவும், விவசாயம் மற்றும் ஏனைய வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியாத நிலையில் அவர்கள் இன்னமும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கேப்பாப்புலவு மக்களின் பூர்வீக காணிகள் தொடர்பான இந்த நீண்டகால பிரச்சினைக்கு இதுவரை நிலையான தீர்வு எட்டப்படாததால், மக்கள் மீண்டும் தங்களது உரிமைகளை வலியுறுத்தி போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 11 நாட்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ் விலைகள் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ் விலைகள் குறைப்பு!

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 

எனவே நாளை கேப்பாபுலவில் இடம்பெறவுள்ள இந்த நீதிக்கான, உரிமைக்கான போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், மதத் தலைவர்களும், இளைஞர் அமைப்புகளும், பொதுமக்களும், கட்சிகளின் பிரதிநிதிகள், கட்சி, மத, இன பேதமின்றி ஒன்றிணைந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாப்புலவு காணி விடுவிப்பு கோரி போராட்டம்! | Mullaitivu People S Lands Under Military Control

மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதோடு, பூர்வீக காணிகள் உரிய உரிமையாளர்களிடம் உடனடியாக மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (04.07.2026) பதினோராவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் கேப்பாப்புலவு பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள நிலையில் அதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026