கட்டுக்கடங்காத நாயாற்று சீசன் மீன்பிடியாளர்களால் ஆபத்து! வீதிக்கிறங்க முற்பட்டதால் அமைதியின்மை!

corona mullaitivu PCR test fisher man nayaru
By Kalaimathy Jul 24, 2021 10:34 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த அனுமதியும் இன்றி புத்தளம் மாவட்டத்தில் இருந்து நாயாற்று பகுதியில் அத்து மீறி குடியமர்ந்து கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீன்பிடி தொழிலாளர்களால் வடக்கில் பாரிய ஆபத்தினை தோற்றிவிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தளத்தினை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் வாடி அமைத்து குறுகிய நிலப்பரப்பில் தொழில் செய்து வருகின்றார்கள். யூலை மாத தொடக்கத்தில் இருந்து இதுரை 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தங்களை விடுவிக்க கோரியும் தமது பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை வெளியிடங்களுக்கு கொண்டு செல்லும் வாகனங்களுக்கு விற்ப்பதற்கு அனுமதிக்குமாறும் இன்று போராட்டத்தில் குதித்துள்ள மக்களால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அச்சுறுத்தலாக காணப்படும் நாயாற்று மீனவ குடும்பங்களினால் சுகாதார பிரிவினர் மிகுந்த சிரமங்களுக்கு முகம் கொடுத்து பணிசெய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த பதிவும் இல்லாத மக்களால் சுகாதார பிரிவினருக்கு பணிசெய்வதில் பாரியசவால்களை எதிர்கொண்டுள்ளனர். இவர்கள் தொடர்பிலான கண்காணிப்போ அல்லது பதிவு நடவடிக்கையோ எவரிடமும் இல்லை இந்நிலையில் தான் 22.07.21 அன்று இந்த பகுதியில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் இரண்டு மாகாணங்களை கடந்து புத்தளத்திற்கு சென்றிருந்தமை இந்த மக்களின் அசண்டையீனத்தினை எடுத்துக்காட்டுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பற்ற மக்களாக எந்த அரச இயந்திரங்களுக்கும் கட்டுப்பாடாத மக்களாக இவர்கள் காணப்படுவதால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கோ அல்லது இந்த நாட்டிற்கோ ஒரு அச்சுறுத்தலான சமூகமாக மாறியுள்ளார்கள் என சுகாதார பிரிவினர் அச்சம் வெளியிட்டுள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களாக வாழ்ந்து வரும் இந்த மக்கள் ஒரு கொரோனா கொத்தணியினை தோற்றிவித்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இது தொடர்பில் பொலிசாரோ அசர நிர்வாகத்தினரோ அக்கறை இல்லாத நிலையில் சுகாதார துறையினர் முழுமையன பங்களிப்புடன் அர்பணிப்புடனும் செயற்பட்டு வரும் வேளையில் புத்தளம் மக்களின் ஒத்துளைப்பில்லாத நிலையில் அவர்கள் சுகாதர பிரிவினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பினையே வெளிப்படுத்தி வருகின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி முடக்கப்பட்ட வேளை ஒரு சிவில் சமூகமாக காணப்பட்ட பகுதி அரச கட்டுப்பாட்டினை சட்டத்தினை நடைமுறைப்படுத்த அதனை ஏற்ற மக்களாக காணப்பட்டார்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் அதிகாரிகள் ஏன் முல்லைத்தீவில் 53 தொற்றாளர்களை கொண்ட முடக்கப்பட்ட கரையோர பகுதி தொடர்பில் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்துவதிலும் அரச இயந்திரங்களுக்கு அழுத்தம் கொடுப்பதிலும் பின் நிற்கின்றன என்ற கேள்வி முல்லைத்தீவு மாவட்ட சமூக அக்கறையாளர்களிடம் எழுந்துள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் காவலரண் அமைத்து வீதிசோதனை செய்து மக்களை விடாப்பிடியாக கட்டுபபடுத்திய பாதுகாப்பு தரப்பினர் புத்தளத்தினை சேர்ந்தவர்கள் வசிக்கும் நாயாற்று பகுதி தொடர்பில் அக்கறை காட்டவில்லை என்பதே மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி. அவ்வாறு அக்கறை காட்டியிருந்தால் எவ்வாறு ஒரு கொரோனா தொற்றாளர் மாவட்டம் விட்டு மாகாணம் விட்டு புத்தளத்திற்கு செல்லமுடியும்? எனவும் பொது மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏன் பாகுபாடு? புத்தளத்தில் இருந்து பருவகால மீன்பிடிக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்று பகுதிக்கு அனுமதி கொடுத்தது யார் இந்த ஆண்டு எவருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனகடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆயிரம் வரையானவர்கள் சுமார் முந்நூறு படகுகளுடன் இங்கு வந்து தொழில் செய்வதற்கு யார் அனுமதித்தார்கள் அவர்கள் தொடர்பிலான பதிவுகள் யாரிடம் உள்ளது? இங்கு வாழ்கின்ற மக்கள் தொடர்பில் எந்த அரச அதிகாரிகளிடமும் பதிவு இல்லாத நிலையில் இவர்கள் செய்யும் தொழில்தான் என்ன கடற்தொழில் என்ற போர்வையில் இவர்கள் முல்லைத்தீவிற்கு வருவதன் நோக்கம் என்ன சட்டவிரோத தொழிலில் ஈடுபடவா (முல்லைத்தீவில் இருந்து இந்தியாவிற்கும் சர்வதேச கடல் எல்லையும் அருகில் இருப்பதன் காரணமா?) என்ற கேள்விகள் முல்லைத்தீவு மாவட்ட மக்களிடத்தில் எழுகின்றது.

இவ்வாறான தொழில் புரிபவர்களை கண்டுகொள்ளாத கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் ஏன் கொரோனா காலகட்டத்தில் இவர்களை இங்கு தொழில் செய்ய அனுமதித்தது. நாயாற்று பகுதியில் புத்தளத்தினை சேர்ந்தவர்கள் வாழும் பகுதிக்கு அருகில்தான் நாயாறு கடற்படை தளம் அமைந்துள்ளது. அண்மைய பகுதியில் இராணுவ முகாமகள் காணப்பட்டாலும் அந்த மக்கள் சிங்கள மொழினை சரளமாக பேசக்கூடியவர்கள் என்பதன் காரணத்தினால் பாதுகாப்பு தரப்பினருடன் பேசியே தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அவர்களும் இசைவாகவே செயற்பட்டு வருவதனை இங்கு தமிழ்மக்கள் மத்தியில் அவர்கள் நடந்துகொள்ளும் செயற்பாட்டினை வைத்து காணக்கூடியதாக இருக்கின்றது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வலயத்தினை தோற்றிவிக்கும் செயற்பாடாகவே புத்தளம் மக்களின் நடவடிக்கை அமைந்துள்ளது எனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

எத்தனை பேர் இவ்வாறு இங்கு வாழ்கின்றார்கள் என்று யாருக்கும் தெரியாத நிலையில் அரசாங்கத்தின் பண உதவியினை பெற்றுக்கொள்வதற்காக 198 பேர் பதிவு செய்துள்ளார்கள். நிவாரணம் கொடுக்கவுள்ளதாக பிரதேச செயலகத்தினால் பதிவினை முனனெடுத்தபோது 845 போர் பதிவினை மேற்கொண்டுள்ளார்கள்.

அவ்வாறு பதிவினை மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் அன்டியன்,பி.சி.ஆர் பிரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார பிரிவினர் பரிந்துரை செய்த போது இல்லை 400 பேர் வரையில் தான் என்று புத்தளம் மீனவர்கள் சொல்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எந்த கணக்கும் பதிவும் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் புத்தள மீன்பிடியாளர்களால் அரச சுகாதார உத்தியோகத்தர்கள் தங்கள் கடமையினை முழுமையாக செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

முடக்கப்பட்ட பகுதியான இந்த பகுதியில் இருந்து 379 பேர் வரைக்கும் பி.சி.ஆர் செய்யப்பட்டதில் இன்று வரை 53 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் முடக்கப்பட்ட ஒரு பகுதியில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர் செய்வதற்காக இன்று சுகாதார பிரிவினர் சென்றபோது முடக்கப்பட்ட பகுதியில் இருந்த புத்தளவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

நாட்டில் எத்தனையோ மக்கள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டும் என வேண்டி நிற்கும் இந்த வேளையில் இந்த மக்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துளைக்காமையானது கவலையளிக்கின்றது எனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடற்தொழில் அமைச்சு, நீரியல்வளத் திணைக்களத்தின் எந்த அனுமதியும் இல்லாத நிலையில் இவர்களின் கடற்தொழில் நடவடிக்கையினையும் இவர்களின் தொழில் நடவடிக்கையினையும் யார் கண்காணிப்பார்கள் இவ்வாறானவர்களின் செயற்பாட்டினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாரிய ஆபத்து எதிர்காலத்தில் உள்ளது.  அரச பாதுகாப்பு இயந்திரங்கள் இதனை கருத்தில் கொண்டு சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை இங்கும் நிறைவேற்ற வேண்டும் என்பது முல்லைத்தீவு மக்களின் எதிர்பார்ப்பாகும்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024