டக்ளஸின் அறிவுறுத்தலையடுத்து கைவிடப்பட்ட போராட்டம்!
இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலை ஊழியர்கள் இருவர் இன்று பேருந்து சாலை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு சாலையில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் செயற்பாட்டிற்கு நீதிகோரி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.
இதன்போது வடபிராந்திய பிரதான முகாமையாளர் எஸ்.குணபாலச்செல்வன் சம்பவ இடத்திற்கு சென்று கவனயீர்ப்பு போராட்டக்காரர்களின் பிரச்சினையினையை கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இதன்போது போராட்ட காரர்கள் தங்கள் கோரிக்கையினை பிராந்திய பிரதான முகாமையாளரிடம் கையளித்துள்ளார்கள். ஒரு மாத காலத்திற்குள் போக்குவரத்து சாலை பணியாளர்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அவர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவித்தலுக்கு அமைவாகவும் போராட்டத்தனை நிறைவிற்கு கொண்டுவந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.












