குத்துச்சண்டைப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த முல்லைத்தீவு யுவதி
காலியில் (Galle) இடம்பெற்று வரும் 49 வது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
இந்தநிலையில், சசிகுமார் ஜெஸ்மிதா என்ற யுவதியே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
49 ஆவது தேசிய விளையாட்டு விழாவானது காலி மாவட்டத்தில் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமாகி இன்றய தினம் (31) நிறைவடையவுள்ளது.
குத்துச்சண்டை
இந்தநிலையில், பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டி தேசியரீதில் நேற்றைய தினம் (30) இடம்பெற்றுள்ளது.
இதில், சசிகுமார் ஜெஸ்மிதா என்ற யுவதி முதலிடத்தை பெற்றுள்ளார்.
கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கிடைத்தாலும் தங்கப் பதக்கம் கிடைப்பது இதுவே முதற்தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
49 வது தேசிய விளையாட்டு விழாவானது காலி மாவட்டத்தில் கடந்த 29 ஆம் திகதி இந்தநிலையில், அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பயிற்றுவிப்பாளர் மற்றும் மாவட்ட பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
